Pages

Friday, April 8, 2016

நம்மை நடத்துகிற கர்த்தர்

கர்த்தர் நல்லவர்...

ஏசா. 58:11 கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களின் உன் ஆத்துமாவை திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்.

இந்த வசனத்தில் மூன்று பகுதிகள் உள்ளன...


1). கர்த்தர் நித்தமும் உன்னை நடத்துவார்

2). மகா வறட்சியான காலங்களிலும் நடத்துவார்

3). எப்படி நடத்துவார்? ஆத்துமாவை திருப்தியாக்குவார்; எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்

நித்தமும் கர்த்தர் நம்மை நடத்துவார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்த வசனத்தில் கர்த்தர் நம்மிடம் சொல்ல விரும்புவது என்ன? மகா வறட்சியான காலங்களிலும் கர்த்தர் நம்மை நடத்துவார் என்பது தான். இதில் காலம் என்பது சீசன் (Season).

ஒரு வருடத்திற்கு 4 காலங்கள் உண்டு. குளிர்காலம், வசந்தகாலம், கோடைகாலம், குளிர்காலம்... இதில் நமக்குப் பிடிக்காத காலம் கோடைகாலம் தான். இந்த வசனத்தில் கர்த்தர் 4 காலங்களிலும் நம்மை நடத்துவார்; கோடை (வறட்சி) காலத்தில் விசேஷமாய் நடத்துவார்.

எப்படி நடத்துவார்? ஆத்துமாவில் திருப்தி என்பது சமாதானத்தைக் குறிக்கிறது. காரணம் நாம் சமாதானத் தை உணரும் பகுதி அது தான். எலும்புகளை நிணமுள்ள தாக்குவார் என்பது சுகத்தைக் குறிக்கிறது. காரணம் எலும்புகளுக்குள் இருக்கும் அந்த மஞ்ஞையிலிருந்து தான் இரத்தம் உற்பத்தியாகிறது. நோய்எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. ஆகவே கர்த்தர் சமாதானத்தையும் சுகத்தையும் தந்து நடத்துவார். இந்த இரண்டு தானே நமக்குப்பிரதானமாய் தேவை.

இந்த வறட்சி காலம் என்பதை சீசன் என்று எடுத்துக் கொண்டாலம் சரி, வாழ்க்கையில் உள்ள போராட்டமான நேரம் என்று எடுத்துக்கொண்டாலும் சரி, அது நிரந்தமல்ல... அது ஒரு சீசன் என்பதை மறந்து போக வேண்டாம். அது மாறும்... அது நிரந்தரமல்ல... அந்த சொற்ப கால வறட்சியிலும் கர்த்தர் நம்மை நடத்துவார் என்பதைத்தான் இந்த வசனத்திலிருந்து புரிந்து கொள்கிறோம்

About Me

My photo
Chennai, Tamil Nadu
Ps. Eliya Jesudas is a pastor and trainer, pioneering a church named Alpha Omega Assembly Jebaveedu, which is located in Railway Station Road, North Korattur, (Near Mohan Garden's Kalyana Mandapam Junction), Chennai - 600076. Zeal to touch the hearts of people with the Power of Gospel. Having a Prayer Band called Jericho Breaking Prayer Band in which people are motivated to pray and break the strongholds of Satan.